நெடுந்தீவில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு
நெடுந்தீவு மக்களின் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், நெடுந்தீவில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (29.11.2026) முற்பகல் 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோகத் திட்டத்தின் கீழ், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக அமைக்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்தொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உயர் அரச அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் நெடுந்தீவு வாழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்







இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri