முக்கிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 6 அடி மற்றும் 4 வான் கதவுகள் தலா 4 அடி என திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொடர் மழை
அதன்படி, அந்த நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் தலா 3 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 4 வான் கதவுகள் தலா 2 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன.
மீ ஓயாவில் வினாடிக்கு 3,720 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri