வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைப்பு
வவுனியா - சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வவுனியா - சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்களை பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்ம ரத்தின பொலிஸ் நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
இதில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்தின, பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.






ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
