யாழில் மகப்பேற்று சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் இணுவிலில் 126 வருடம் பழமை வாய்ந்த மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் கெங்கம்மாவின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று மருத்துவ சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழாவானது இன்று (10) காலை சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
விருந்தினர்கள்
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்துள்ளார்.
மேலும் நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் எஸ்.ரவிராஜ் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் விசேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரியும் கலந்து சிறப்பித்துள்ளனர்.