கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் குடிநீர் தாங்கி திறப்பு!
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட சுமார் 08 லட்சம் ரூபாய் பெறுமதியான குடிநீர் தாங்கியினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வானது இன்றையதினம்(2.6.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு மக்களுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்று ரீதியான உறவு தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
குடிநீர் தாங்கி திறப்பு
அத்துடன், இந்தப் பகுதி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
மன்னார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்தி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, தூதரக அதிகாரிகள், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் நா,வேதநாயகன், இந்திய துணைத்தூதுவர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையையும் பார்வையிட்டார்.


பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri