இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு: நன்னீர் மீன்பிடி படகுகள் மாயம் (Video)
வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக நீர் வருகை காரணமாக இன்று(15.12.2023) அதிகாலை வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்திருந்தது.
இடர் முகாமைத்துவம்
அந்த வகையில் இன்று 12 வான் கதவுகள் திறந்து விடப்பட்டதால் இரணைமடு குளத்தில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் சில மாயமாகியுள்ளதுடன், வலைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் எனவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், குளங்கள் வான்பாய்வதாலும் மக்கள் இடர்கள்
ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு
மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில், கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினரின் உதவிகளை நாடுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
