அரசியல் பயணம் குறித்து மனம் திறந்த இலங்கையின் பிரபல பாடகி யொஹானி
'மெனிக்கே மகே ஹிதே' பாடல் மூலம் சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா (Yohanni de Silva) தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியா, டுபாயில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த நிலையில் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததுடன்,இதன்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தனது அரசியல் பயணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்த பிரபல சந்தர்ப்பத்தை வைத்து அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வியெழுப்பப்பட்ட நிலையில்,அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. இசைத்துறையில் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது.
எனது எதிர்பார்ப்புக்கள் இசை துறையில் மேலும் முன்னேற வேண்டும் என்பதே அரசியல் குறித்த எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri