இந்திய ரோ அமைப்பு தொடர்பில் மகிந்த முன்னர் வைத்த குற்றச்சாட்டு! முன்னாள் மேஜர் மதன்குமார்
இந்தியாவின் இறையாண்மைக்கு ஒரு பங்கம் வரும் என்றால் இலங்கையையும் எதிரியாகத் தான் பார்ப்போம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதாக இந்தியாவில் இருக்க கூடிய இராணுவத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிகாரி மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இப்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை கட்டுக்குள் கொண்டு வர என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அவற்றை எடுத்து பிறகு இந்தியா தனது நிலையை இலங்கைக்கு அறிவிக்கும்.
அந்த அறிவிப்பில் நான் எதிர்பார்ப்பது இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான ஒரு செய்தி அனுப்பப்படும். இது என்னுடைய ஊகம்.
இலங்கையின் வான்பரப்பு, நிலப்பரப்பு, கடற்பரப்பு இதில் ஏதாவதொன்றை எதிரி நாட்டிற்கு கொடுத்து அதன் மூலமாக இந்தியாவின் இறையாண்மைக்கு ஒரு பங்கம் வரும் என்றால் இலங்கையையும் எதிரியாகத் தான் பார்ப்போம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கு முழு காரணம் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்சர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இழந்ததால் தான் விடுதலைப் புலிகள் இலங்கை அரசிடம் தோல்வியை தழுவினார்கள்.
விடுதலைப் புலிகளின் இந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகள் இல்லாமல் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது.
இதனால் தான் சீனாவின் இராணுவப் பார்வை மற்றும் வர்த்தக பார்வை குறித்த இடங்களை நோக்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
