OnmaxDT நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரமிட் திட்டத்தை நடத்தி வருவதாக நம்பப்படும் தனியார் நிறுவனமான ‘OnmaxDT’ நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு, கொழும்பு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்துவதற்கான செயல்முறையை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே(Dilina Gamage) இன்று(02.05.2024) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணை
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட OnmaxDT இன் நான்கு பணிப்பாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri