நாடு காலனித்துவ ஆட்சிக்குள் செல்லக்கூடிய அபாயத்தில்
இலங்கை மீண்டும் காலனித்துவ ஆட்சி முறைக்குள் செல்லக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை கட்டி எழுப்பக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உடைய ஒரே தலைவர் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியளர்களுக்கு நாட்டை நிர்வாகம் செய்யக்கூடிய திறன் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களை திசை திருப்பும் ஜனநாயக விரோத ஆட்சியாளர்களினால் நாட்டை கட்டி எழுப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடு பாரிய மாற்றத்தை எதிர் நோக்க வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு 50 ஆண்டுகால அரசியல் அனுபவமும் சர்வதேச தொடர்புகளும், பொருளாதார நிர்வாகத் திறனும் காணப்படுவதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இந்த நாட்டு மக்கள் பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் இந்த நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri