புதிய ஜனாதிபதியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சக்தி: முஸம்மில் மொஹிதீன் (Photo)
நாட்டில் இனி ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு, ஜனாதிபதியின் தூர நோக்குடன் விஸ்தரிக்கப்படும் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
முள்ளிப்பொத்தானையில் நேற்று(21) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் விருப்பம்
"எமது தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சி பங்காளி கட்சியாக செயற்பட்டு வருகின்றது. நாம் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை ஜனாதிபதியின் கட்சியோடு இணைந்தே செயற்பட்டு வருகின்றோம்.
நாட்டில் உள்ள அரசாங்கத்தினை வெறுத்து மக்கள் வீதிகளில் நின்கின்றார்கள். அதற்கு புதிய ஜனாதிபதி இடமளிக்க கூடாது. மக்கள் அபிலாசைகள் நிவர்த்திக்கப்பட்டு மக்களின் விருப்பத்திற்குரியவராக மாறவேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்
வீழ்ந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தக்கூடிய புதிய ஜனாதிபதிக்கு மக்கள் ஒத்துழைப்புகளை வழங்கி ஆட்சியமைக்க வழிகளை விட வேண்டும்.
புதிய ஜனாதிபதியினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் முடியும்," என தெரிவித்துள்ளார்.
கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்! மக்களுக்கு பகிரங்க அழைப்பு (Live) |



