இன அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும்: செ.கஜேந்திரன் (Photos)

Tamils Geneva Sri Lanka
By Kajinthan Oct 19, 2022 01:26 PM GMT
Report

ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடன் நேற்று (18.10.2022) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் ஒருபோதும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும்: செ.கஜேந்திரன் (Photos) | Only International Genocide Establish Reparative

இதற்கு மாறாக ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

பொருளாதார சூழ்நிலை

இந்நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது.

ஜெனிவா தீர்மானம்

அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை முன்வைக்கவேண்டும்.

அத்தோடு, ஜெனிவா தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இன அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும்: செ.கஜேந்திரன் (Photos) | Only International Genocide Establish Reparative

இச்சந்திப்பை தொடர்ந்து ஆளும்கட்சிகளில் ஒன்றான பசுமைக் கட்சியின் கொள்கைவகுப்பாளருடனும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, ஈழத்தமிழர்கள் சார்ந்து சில நிலைப்பாடுகளை உணரமுடிந்தது என்பதையும், அத்தோடு அவர்களுடன் ஒரு தொடர்ச்சியான தகவல்பரிமாற்றத்தை முன்னெடுக்கவும் அவர்களுடனான தொடர்பை பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி ப.அஞ்சனா மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களும் கலந்துக் கொண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US