ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மா:மோகன் பகவத்
இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் நெருக்கடியில் இருந்தபோது ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புக்களில் குறியாக இருந்தபோதும் இந்தியா மட்டுமே அந்த நாடுகளுக்கு உதவியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடிகளின் போதும் ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புகளை தேடுவதில் ஆர்வமாக இருந்தன என்று இந்தியாவின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆன்மிகம் என்பது 'இந்தியாவின் ஆன்மா' என்ற தலைப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மா

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இந்த ஆன்மிகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இந்தியா சொந்த உதாரணத்தின் மூலம் அனைவருக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
பொறாமை இல்லாமல் வாழ்வதே இந்தியாவின் ஆன்மா ஆகும்.
இலங்கை சிக்கலில் இருக்கும்போது இந்தியா மட்டுமே உதவுகிறது. அத்துடன்
மாலைத்தீவு தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்ட போது அந்த நாட்டுக்கு தண்ணீரை
இந்தியாவே வழங்கியது.இதுவே ஆன்மீக இந்தியா”என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam