இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்து - மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, போலி இணைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான சம்பவங்கள் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிற்கு (SLCERT) தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், எரிபொருளைப் பெறுவதற்கும், போலியான பதிவுச் செயல்பாட்டின் போது உங்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களை (தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள், அடையாள அட்டை எண்கள் போன்றவை) திருடுவதற்கும் குற்றவாளிகள் தனிநபர்களை டோக்கனில் பதிவு செய்யுமாறு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் சட்டவிரோத செயல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.
எனவே இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan