கொழும்பு பகுதியில் சிக்கிய சீனர்கள் உள்ளிட்ட 37 வெளிநாட்டுப் பிரஜைகள்
இணையத்தின் ஊடாக ஐயாயிரம் கோடி ரூபா பணம் மோசடி செய்த சீனப் பிரஜைகள் உள்ளிட்ட 37 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளை விளக்க மறியலில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணைய வழியில் பாரியளவில் நிதி மோசடி செய்தமை குறித்த வழக்கு இன்றைய தினம்(18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்ற தடை
இதன் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, அல்ஜீரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 31 இளைஞர்களும், 5 யுவதிகளும் இரண்டு இலங்கைப் பிரஜைகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணைய வழி மோசடிகளை மேற்கொள்வதற்காக நீர்கொழும்பில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹோட்டலின் நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |