உயர் நீதிமன்ற பரிந்துரைகளை உள்வாங்கப்படாமல் நிறைவேற்றப்பட்ட சட்டம்
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் செய்த பரிந்துரைகள் அதாவது சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென கூறப்பட்டாலம் அது அங்கே உள்வாங்கப்படாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பத்திரிகையாளரும் ஊடக விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கறுப்பு ஜனவரி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போாத அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இப்போது நிறைவேறியிருக்கின்ற சட்டமூலம் இலங்கையில் ஒரு குற்றத்திற்கு 3,4 சட்டங்கள் இருக்கின்றதாக தான் நான் பார்க்கின்றேன்.
நிகழ்நிலை காப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போது 108 வாக்குகள் ஆதரவாக வந்தது. 62 வாக்குகள் எதிராக வீழ்ந்துள்ளது. 54 பேர் வாக்களிக்கவில்லை. அவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்றால் அவர்களிற்கு அதில் உடன்பாடில்லை என்பது தெளிவு.
நாடாளுமன்றத்தில் அதிகமான பேருக்கு இதில் உடன்பாடில்லை. அடுத்ததாக உயர் நீதிமன்றம் செய்த பரிந்துரைகள் அதாவது சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சொன்னாலும் அது அங்கே உள்வாங்கப்படவில்லை. எதிர்கட்சி கொண்டுவந்த திருத்தங்கள் எடுத்துக்கொள்ளவே இல்லை. யாருடைய கருத்துகளமின்றி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
