அடுத்த வாரம் நடைமுறைக்கு வரவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அடுத்த வாரம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.
அத்துடன் சுமார் 62 எம்.பி.க்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது 46 வாக்குகள் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலமானது, தற்போது சட்ட வரைவுத் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக சபாநாயகரின் அனுமதிக் கையொப்பம் இன்னும் இடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam