உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறையாகும் புதிய திட்டம்
இந்த வருட இறுதிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணையவழியில் பணத்தை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே 69 உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறையில் உள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் இணையவழி முறையின் ஊடாக மதிப்பீட்டு வரி உள்ளிட்ட பல வரி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வேலைத்திட்டம்
இது தவிர நிர்மாணத்துறைக்கு தேவையான அனுமதிகளை இணையவழி முறையின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மக்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் இவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam