ஒன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகள் விளையாடும் ஒன்லைன் விளையாட்டுக்களில் (Online games) குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை மற்றும் தவறான காட்சிகள் உள்ளன எனவும் பெற்றோர் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் எனவும் கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் (Saranya Jeyakumar) வலியுறுத்தியுள்ளார்.
ஐபிசி தமிழின் (IBC Tamil) அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஒன்லைன் விளையாட்டுக்கள், டிக் டொக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டும் குழந்தைகள் தமது ஞாபக சக்தியை இழக்கிறார்கள்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதேவேளை, இவ்வாறான ஒன்லைன் விளையாட்டுக்களுக்காக குழந்தைகள் பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர்.
அத்துடன், 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்ட வேண்டாம் என அமெரிக்க உளவியல் சங்கம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்டி உணவளிக்கும் பெற்றோர் அதனை உடனே நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |