இணைய வழி பணப்பரிவர்த்தனைகளில் கட்டணக் குறைப்பு!
இணையவழி அல்லது ஒன்லைன் மூலம் பண பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது வங்கிக் கணக்கிலிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண மாற்றத்தின் படி, இனிமேல் ஒன்லைன் மூலம் பணம் பரிமாறும் போது ரூபாய் 25 மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
பண பரிமாற்றங்கள்
இதற்கு முன்பு, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பும் போது, ரூபாய் 30 கூடுதலாக கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த மாற்றம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் கலந்துரையாடல் நடத்தியதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
