அரசாங்கத்தின் மற்றுமொரு புதிய தீர்மானம்!
சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு கடந்த 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரம் தேவையென சட்டவரைஞரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை துரிதமாகத் தயாரித்து அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்குவதற்காக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
