யாழில் விவசாயி ஒருவரின் புதிய கண்டுபிடிப்பு (Video)
வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.
அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார்.
வெங்காயம் நடுகை
இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு
குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை 18 வெற்றி
கண்டுள்ளார்.
இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் நடுகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது அதன் மூலம் எப்படி வெங்காய நடுகையினை மேற்கொள்வது போன்ற விடயங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
புதிய கருவி பயன்பாடு
குறித்த நடுகைமுறை வெற்றி அளிக்கும் முறையாக விவசாய அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டால் அதனை அனைவருக்கும் பரிந்துரைப்பதற்கு முன்வரவுள்ளனர்.
இந்நிகழ்வில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி, முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

திடீரென விஜய் டிவி செய்த மாற்றம், கோபத்தில் உள்ளாரா எஸ்.ஏ.சி- இப்படியொரு முடிவு எடுத்தாரா? Cineulagam

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்... கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து News Lankasri
