வவுனியாவில் தொடர்ச்சியாக கோவிட் - 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு
வவுனியா மாவட்டத்தில் கடந்த 28ஆம் திகதி தொடக்கம் கோவிட் - 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆசிரியர்கள், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதோடு இச்செயற்பாட்டினை சுகாதார பகுதியினர், கிராம சேவகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈச்சங்குளம், புதுக்குளம், கல்மடு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடனும் சுகாதார நடைமுறைகளைப் பேணியும் இவ் தடுப்பூசியினை பெற்றுச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றையதினம் புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 2000 வரையான தடுப்பூசிகளைப் போடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இதுவரை வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் அண்ணளவாக 35000 இற்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, வவுனியா வைத்தியசாலை, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நவ்வி, நெடுங்கேணி வைத்தியசாலை போன்ற பல்வேறு இடங்களில் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 42 நிமிடங்கள் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
