போரினால் உலகம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடி குறித்து ஐநா எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்துவதுடன், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா பகுதிகளுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்கள் செல்வதை நேரடியாக பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் தீவிரமடைவதால் உணவுப் பொருட்கள், எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இது ஏற்கனவே வறுமையில் உள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய பதற்றம் மற்ற முக்கிய விநியோகப் பாதைகளையும் சேதப்படுத்தும் என பிளெட்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக, அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்பான பாதைகளை உறுதி செய்ய வேண்டும் என பிளெட்சர், கோரிக்கை விடுத்துள்ளார்.
மனிதாபிமான உதவிகளுக்குப் போரிலிருந்து விலக்கு அளித்து, தேவையான இடங்களுக்கு மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 4 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri