யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்
யாழ்ப்பாணம்(Jaffna) போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் திருடிய நபரொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
இந்த திருட்டுச் சம்பவமானது நேற்றைய தினம்(21.06.2024) மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர், நோயாளி ஒருவரிடம் நூதனமான முறையில் குறிப்பிட்ட நோயாளியை எக்ஸ் கதிர் படம்(X Ray) எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்றும் கூறி அவரை எக்ஸ் கதிர்ப்படம்(X Ray) எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
இதேவேளை, இந்த திருட்டு சம்பவமானது வைத்தியசாலை சிசிரிவி(CCTV) இல் பதிவாகியுள்ளதுடன் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
