கத்தோலிக்கர்களுக்கு வத்திக்கானிலிருந்து விடுக்கப்பட்ட ஆணை
உலக கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கான், கத்தோலிக்கர்கருக்கு ஒரு துணை இருந்தால் போதும் [அதாவது ஆண் - பெண் குடும்ப உறவு அதன் பொருள்] என்று வத்திக்கானின் உயர்மட்ட திருமணச் சட்ட கோட்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அங்கீகரித்த புதிய ஆணையில், உலகின் 14 பில்லியன் கத்தோலிக்கர்களிடம், வாழ்நாள் முழுவதும் ஒரு துணையை மட்டுமே திருமணம் [அதாவது ஆண் - பெண் குடும்ப உறவு அதன் பொருள்] செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பதினான்காம் லியோ
மேலும் பலதார மணத்தில் ஈடுபடக்கூடாது என்றும் வத்திக்கானின் மிக உயர்ந்த கோட்பாட்டு அலுவலகம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சபை உறுப்பினர்கள் உட்பட ஆப்பிரிக்காவில் பலதார மண நடைமுறையை விமர்சித்த வத்திக்கான், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் உறுதிப்பாடு என்று கதஹ்தோலிக்க திருச்சபை நம்புவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஒரே பாலின உறவு
ஒரே பாலின உறவுகளைப் பற்றி விவாதிக்காத இந்த ஆணையகம், பாரம்பரிய திருமணத்தின் "செல்வம் மற்றும் பலன்" என்று அழைக்கப்பட்டதில் கவனம் செலுத்தியுள்ளது.
இது கத்தோலிக்கர்களை ஒரு துணையைக் கண்டுபிடித்து [அதாவது ஆண் - பெண் குடும்ப உறவு அதன் பொருள்] அவர்களுடன் உறுதியுடன் இருக்க ஊக்குவித்துள்ளது.
ஒவ்வொரு உண்மையான திருமணமும் ஆண் - பெண் ஆகிய இருவரதும் ஒன்றியம்,
இது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு நெருக்கமான மற்றும் முழுமையான உறவைக் கோருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam