காதலனுக்காக காதலி எடுத்த விபரீத முடிவு
கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் காதல் தோல்வி காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(31.082024) இடம்பெற்றுள்ளது.
அரவிந்தன் துசானி என்ற 18 வயதுடைய மாணவியே இதன்போது உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த மாணவி சுமார் இரண்டு வருடங்களாக காதல் உறவில் இருந்ததாகவும், தனது காதலன் மற்றுமொரு மாணவியுடன் இரகசியமாக பழகிய சம்பவம் அம்பலமானதை அடுத்து அவர் தூக்கிட்டு உயிர்மாய்த்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், உயிரிழந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாகவும் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
