யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல்
காரியாலயம் நேற்று (31) பிற்பகல் சாவகச்சேரி - மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது.
ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவரும்-2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு தேர்தல் காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விரான் விக்கிரமரட்ண, மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri