சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் விடுதலை! (Video)
நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
74வது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 197 சிறைக்கைதிகள் இன்று (04.02) விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும், 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மல்லாவி பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.









என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam