காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் திடீர் உயிரிழப்பு
காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத நோய் காரணமாக கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 5 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோய்த்தொற்றை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைத்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவாசக் கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று (20.08.2023) உயிரிழந்துள்ளார்.
காலி சிறைச்சாலையின் 2840 இலக்கமுடைய 32 வயதான கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை
மூச்சுத் திணறல் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் பிரேதப் பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this video |
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



