கல்முனை பகுதியில் திடீரென விழுந்து ஒருவர் மரணம்
கல்முனை - துரைவந்தியமேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கல்முனை நட்பிட்டிமுனைக்கு மாடுகளைத் தரைவழிப் பாதையூடாகவும், மேய்த்துக் கொண்டு சென்று வேளை துரைவந்தியமேடு பகுதியில் வைத்துக் குறித்த நபர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாட்டிலே ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மாடுகளைச் மேய்த்து வந்த மண்டூர் பாலமுனையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை கிருஸ்ணமூர்த்தி(வயது-55)என்பவரே மயங்கி விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரை பிரதேச வாசிகள் கல்முனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இவ்விடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
