மட்டக்களப்பு - வாழைச்சேனையில் துப்பாகி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய
பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (12.03.2024) மாலையில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது உயிரிழந்தவரும் அவரது நண்பனான 52 வயதுடைய ஆகிய இருவரும் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டுவருவதற்காக சம்பவதினமான நேற்று (12) மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து அரச அனுமதி பெற்ற சொட்கண் துப்பாகியுடன் குறித்த பிரதேசத்தில் கொக்குகளை சுட்டு வேட்டையாட சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கொக்குகளை குறிபாத்து சுட எத்தனித்த போது துப்பாகி வெடித்ததில் துப்பாக்கியை இயக்கியவரின் கழுத்துபகுதியில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam