எல்லை மீறிய வாக்குவாதத்தினால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
குருநாகல் - குளியாப்பிட்டி, ரத்மலேவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு(31.08.2024) இடம்பெற்றுள்ளது.
குளியாபிட்டிய கலஹிதியாவ பிரதேசத்தில் வசித்து வந்த இசங்க தமித் ராஜபக்ச என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
அத்துடன், உயிரிழந்தவர் கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகளில் சம்பந்தபட்டவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை கச்சேரி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன்னர் வீட்டில் இடம்பெற்ற மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கான காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
