மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவர்
பதுளை, ஹிந்தகொட பகுதியில் தனது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(31.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அந்தத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 5 , எஸ்.எப்.ஜி. ரக கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பெண் (வயது 33 வயது) கைதான நபரின் மனைவி என்றும், அந்தப் பெண்ணின் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர் பதுளை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்றும், பதுளை - பசறை வீதியில் ஹிந்தகொட பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவருடன் அவர் காதல் உறவு பேணி வந்த நிலையில் இதை அறிந்த மனைவி மேற்படி பெண்ணின் வீட்டுக்குச் சென்ற வேளையிலேயே கணவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மேற்படி சந்தேகநபர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரைப் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
