யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி
யாழ். போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறீ பவானந்தனாஜா தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் சில பிரிவுகள் மூடப்பட்டதோடு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் தற்போது அந்த நிலைமை மிகவும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் நோயாளர்களைப் பார்வையிட ஒரு நோயாளியைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan