மானிப்பாயில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
யாழ்.மானிப்பாய் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை இன்று கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான இன்று மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸ் அதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட 50 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் ,அவரிடமிருந்து விலை உயர்ந்த மதுபானப் போத்தல்களையும் மீட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.