கம்பஹா பகுதியில் வாள் வெட்டில் ஒருவர் பலி: பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா - மஹா ஹூணுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதலில், வாளால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(13.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு
பொலிஸார் தீவிர சோதனை
மஹா ஹூணுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது மோதலாக மாறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவரைத் தேடிப் பிடிப்பதற்கான விசேட விசாரணைகளைக் கட்டான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri