லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு! நால்வர் வைத்தியசாலையில்
லிந்துலை, லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் ஆண் தொழிலாளர் குழுவினர் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதி
இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த அப்பாவு சுப்பிரமணியம் (வயது 71) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றைய 4 தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேயிலை மலையின் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்தே, அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களைக் கொட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனோஜன் விவகாரம் தொடர்பில் அவரது சட்டத்தரணி கூறியுள்ள விடயம்! எழுத்துமூல தீர்ப்பு குறித்து வெளியிடப்பட்ட தகவல்