தொடருந்தில் மோதி நபரொருவர் மரணம்: திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை-நாளாம் கட்டை பகுதியில் தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (25.02.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் மோதியதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணை
திருகோணமலை-கண்டி வீதி, 05ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ்.எச்.பிரசன்ன பிரதீப் குமார என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்குச் சீனி வியாதி, சிறுநீரக நோய் போன்ற நோய்கள் காணப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் தொடருந்தில் மோதியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
