குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணம்
திருகோணமலை - தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69வயது) எனவும் தெரியவருகின்றது.
வீட்டிலிருந்து மாடு பார்ப்பதற்காக சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும், இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது
உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
