வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!(Photos)
வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(17.08.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
மேலும், விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ
இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 23 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
