மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை துளசிமணி என்பவரே உயிரிழந்ததாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
சித்தாண்டி பகுதியிலுள்ள சிறுவர் இல்லத்தில் சமைலறை உதவியாளரான இவர் தனது மகளின் வீட்டிலிருந்து சிறுவர் இல்லத்திற்கு செல்வதற்காக பிரதான வீதியைக் கடந்துசென்றவேளை சிறிய லொறியொன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
லொறியின் சாரதி கைது
லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்த லொறி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தினால் உயிரிழந்த மூதாட்டியின் தலை சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் பின்னர் மாவடிவேம்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலத்தையும் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
