தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி : கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்காக செல்லும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று மாலை(19.12.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 34 வயதுடைய கணேசன் ரமேஷ்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட வேளையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து குறித்த நபரை உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
