யாழில் பிறந்து நான்கு நாட்களேயான குழந்தை மரணம்
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த குழந்தை நேற்றையதினம் (19.12.2023) உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை
குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் உள்ள
தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ள நிலையில் தாயும் குழந்தையும் கடந்த
16ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று(18) குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடல்நிலையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குழந்தை மீண்டும் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri