முல்லைத்தீவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு (Mullativu) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(02.05.2024) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், சடலத்தை நேற்று(02) மாலை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி S.H .Mahroos சடலத்தை உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த நபருடைய வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முல்லைத்தீவு திறந்த நீதிமன்றத்தில் இடம்பெறும் எனவும் இது தொடர்பான சாட்சியமளிக்க உள்ளவர்கள் அந்த இடத்தில் சாட்சியம் அளிக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam