கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய முல்லைத்தீவு நபர்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயன்ற சந்தர்ப்பத்திலேயே இவர் வசமாக சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் சந்தேகத்திடமான முறையில் செயற்பட்ட நிலையில் அவரிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் இத்தாலி கடவுச்சீட்டை காட்டியதை தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் இத்தாலி மொழியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் சந்தேகநபரால் அதற்கு பதிலளிக்க முடியாமல் போயுள்ள நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கை கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு - யோகப்புரம் பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam