வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து: முதியவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர், கடந்த புதன்கிழமை(04) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் இன்றையதினம்(06) உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தி - வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
நேற்றுமுன்தினம்(04) காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற வழியாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த முதியவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றையதினம்(06) உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri