யாழில் பால் புரைக்கேறியதில் ஒரு மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ் - இணுவில் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திடீர் மரண விசாரணை
குறித்த குழந்தையானது நெடுநேரகமாக அசைவற்று கிடப்பதினை கண்ட பெற்றோர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனை
இதனை தொடர்ந்து மரணம் தொடர்பிலான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.
இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |