யாழில் பொலிஸாரின் சமிக்ஞைகளை மீறிய இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை
யாழ். நெல்லியடியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
குறித்த இளைஞர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23.11.2022) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 45000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய இளைஞர்
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போது மோட்டார்சைக்கிளில் வீதியில் வந்த இளைஞரை மறித்தபோது, பொலிஸாரின் சமிக்ஞையை மீறி அந்த இளைஞரின் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
குறித்த இளைஞரின் மோட்டார்சைக்கிளின் இலக்கத்தின் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 53 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
