பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49), சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதன்படி கடந்த மே மாதம் 28-ம் திகதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன், அங்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
இதனையடுத்து ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28-ம் திகதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜூலை 28-ம் திகதியுடன் பரோல் முடிவடைய இருந்தநிலையில், பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் மயிலா இது, 5 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க... போட்டோஸ் Cineulagam
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan